பி.எஸ்.சி. செவிலியர் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடக்கம்

Posted By:

சென்னை: பி.எஸ்.சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது.

பி.எஸ்.சி செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.எஸ்.சி. ரேடியாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்பூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி உள்ளிட்ட படிப்புகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியுள்ளது.

இந்த கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று காலை தொடங்கியது.

பி.எஸ்.சி. செவிலியர் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடக்கம்

முதல்நாளான நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங்கை நடத்த தேர்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கவுன்சிலிங்கில் பங்கேற்ப விரும்பும் மாணவ, மாணவிகள் "செயலர், தேர்வுக் குழு' என்ற பெயரில் ரூ. 200-க்கு வரைவோலையை கொண்டு வருவது அவசியம். குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Counselling has been started for B.sc Nursing courses in Omanthoorar multi speciality hospital and college Chennai yesterday.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia