கர்நாடக மருத்துவக் கல்லூரிகளில் பிஜி படிப்புகளுக்கான கலந்தாய்வு... ஏப்ரல் 10 முதல் 12 வரை!

Posted By:

பெங்களூர்: முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான இந்த கலந்தாய்வு ஏப்ரல் 10 முதல் 2017 ஏப்ரல் 12 வரை நடத்தப்படும். இந்த கலந்தாய்வு கர்நாடகா மாநிலத்திலுள்ள 8 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் மார்ச் 28ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.codeunik.org. என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள காலக் கேடுவிற்கு முன் விண்ணப்பிக்கவும்.

கர்நாடக மருத்துவக் கல்லூரிகளில் பிஜி படிப்புகளுக்கான கலந்தாய்வு... ஏப்ரல் 10 முதல் 12 வரை!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான கலந்தாய்வு நீட் அதிகாரிகளால் நடத்தப்படும் என கர்நாடகா தேர்வு ஆணையம் மற்றும் காமட்.கே தெரிவித்துள்ளது.

கர்நாடகா அறக்கட்டளையைச் சார்ந்த தொழில் கல்லூரிகளான 14 மருத்துக் கல்லூரி மற்றும் தனியார் தொழில் நுட்பக் கல்லூரிகளால் நடத்தப்படும் 24 பல்மருத்துவக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக உள்ள இடங்களை நீட் தேர்வு முடிவின் மூலம் நிரப்ப இருப்பதாக காமட்-கே தெரிவித்துள்ளது. இது ஒற்றை சாளர கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். இதன் மூலம் 400 மருத்துவம் முதுகலை படிப்பில் சேருவதற்கான இருக்கைகளும் மற்றும் 250 பல் மருத்துவம் முதுகலைப் படிப்பில் சேருவதற்கான இருக்கைகளும் நிரப்பப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் தேர்வின் முடிவு ஜனவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்பில் சேருவதில் ஏற்படும குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு பொதுவான தளத்தில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஏப்ரல் 10 மற்றும் 12ம் தேதியில் கலந்தாய்வு நடத்தப்படும.

கலந்தாய்விற்கான தேதிகள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வித்தியாசமாக உள்ளதால் அது பொதுவாக நடக்க வேண்டும் என கடந்த வாரம் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டார்கள்.

காமட்-கே நிர்வாகச் செயலாளர் குமார் டிஎச், தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களிலும்
உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜெயா நகரிலுள்ள என்எம்கேஆர்வி கல்லூரியில் பெண்களுக்கு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

கேஇஏ ஆலோசனை நடத்துகிறது. இதனைத் தொடர்ந்து காமட்-கே விரைவில் ஆலோசனை நடத்தும். அதன் பின் ஒரு நாள் இடைவெளிக்குப் பின் சிஓடிஇயுஎன்ஐகே ஆலோசனை நடத்தும் என குமார் கூறியுள்ளார்.

English summary
The Consortium of Deemed Universities in Karnataka (CODEUNIK) has announced that counselling for PG NEET would be conducted between April 10 and 12 to fill postgraduate medical and dental seats in eight deemed universities in the state.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia