நர்சிங் டிப்ளமோ படிப்புக்கு கவுன்சிலிங் தொடங்கியது

Posted By:

சென்னை: நர்சிங் பிரிவில் டிப்ளமோ படிப்பு படிப்பில் மாணவிகள் சேர்வதற்கான கவுன்சிலிங் சென்னையில் இன்று(ஆகஸ்ட் 31) தொடங்கியது.

இந்த கவுன்சிலிங் தொடர்ந்து 3 நாட்களுக்கு சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள 23 அரசு நர்சிங் டிப்ளமோ படிப்புப் பள்ளிகளில் உள்ள 2,000 இடங்களுக்கு மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்.

நர்சிங் டிப்ளமோ படிப்புக்கு கவுன்சிலிங் தொடங்கியது

முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவில் உள்ளளவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங் தொடங்கியதையடுத்து ஏராளமான மாணவிகள் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதில் கலந்து கொள்வதற்கான ஒவ்வொரு மாணவிக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவிகள் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று அங்கிருந்து அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் "செயலாளர், தேர்வுக் குழு' என்ற பெயரில் ரூ. 200-க்கு எடுக்கப்பட்ட வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Counselling for Nursing Diplomo courses has begins at Chennai Omanthoorar Multi-speciality Hospital today. The selection committee has sent letters to More than 2,000 students for counselling.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia