நர்சிங் டிப்ளமோ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று நிறைவடைகிறது!

Posted By:

சென்னை: நர்சிங் டிப்ளமோ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்றுடன் (செப்டம்பர் 2) நிறைவடையவுள்ளது.

தமிழகத்திலுள்ள பல்வேறு அரசு நர்சிங் படிப்புகளுக்கான பள்ளிகளில் நர்சிங் டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான சேர்க்கை ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் அரசு நர்சிங் டிப்ளமோ படிப்பு கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரம் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

நர்சிங் டிப்ளமோ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று நிறைவடைகிறது!

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற முதல் நாள் கவுன்சிலிங்கில் 632 இடங்கள் நிரம்பின. 2-ம் நாள் நடைபெற்ற கவுன்சிலிங்கில் 639 இடங்கள் பூர்த்தியாகின.

இரண்டாம் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்க பொதுப்பிரிவைச் சேர்ந்த 894 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் 640 மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். கவுன்சிலிங்கின் முடிவில் 639 இடங்கள் நிரப்பப்பட்டன.

இரண்டு நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,271 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. மீதம் உள்ள 729 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Counselling for the nursing diploma courses will ends today, Medical education Directorate officials said. In the last 2 days 1,271 seats has been filled through counselling.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia