எல்எல்எம் சட்டப் படிப்பு பயில ஆகஸ்ட் 26-ல் கவுன்சிலிங்!!

Posted By:

சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு (எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் எல்.எல்.எம். முதுநிலை சட்டப் படிப்புக்கு சேர்க்கைகளை சட்டக் கல்வி இயக்குநர் அலுவலலகம் செய்து வருகிறது.

இந்தக் கல்லூரிகளில் உள்ள எல்எல்எம் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் தனியே அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Counselling for LLM Course will be conducted on Aug 26 In Chennai DR. Ambdkar Law College.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia