எல்எல்பி சட்டப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்! கவுன்சிலிங் தொடங்கியது!!

Posted By:

சென்னை: எல்எல்பி சட்டப் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. எல்எல்பி சட்டப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 200-க்கும் மாணவர்கள் எல்எல்பி படிப்புகளைத் தேர்வு செய்தனர்.

எல்எல்பி சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதற்கான கவுன்சிலிங் நேற்று தொடங்கியுள்ளது. மூன்றாண்டுகள் பயிலும் வகையிலான சட்டப் படிப்பாகும் இது.

எல்எல்பி சட்டப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்! கவுன்சிலிங் தொடங்கியது!!

செப்டம்பர் 16-ம் தேதி முதல் எல்எல்பி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளான 7 அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

மொத்தம் 6,188 பேர் இந்த படிப்புக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் பொதுப் பிரிவினர் (ஒ.சி.) 320 பேர் முதல் நாள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும் அதிகமானோர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரியில அனுமதி சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுச் சென்றனர்.

மேலும் முதல்நாளில் திருநங்கை ஒருவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்றார். அவருக்கு அனுமதியும் கிடைத்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை வரை கவுன்சிலிங் நடைபெறும் என்றும், வருகிற 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.

English summary
Counselling for LLB Courses has Begin in Chennai Dr. Ambedkar Law University. More Than 1,200 LLB seats available in the Affiliated colleges.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia