இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நாளை கலந்தாய்வு தொடக்கம்!!

Posted By:

சென்னை: இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக நாளை(ஜனவரி 30) கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நாளை(ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நாளை கலந்தாய்வு தொடக்கம்!!

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu public services commission has announced the counselling date for the post of Junior assistants in School education department.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia