அக்டோபர் 5 முதல் குரூப் 2 தேர்வுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்!

Posted By:

சென்னை: குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள 2ஏ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப் 2 தொகுதியில் அடங்கிய நேர்முகத் தேர்வு இல்லாத காலியிடங்களை நிரப்பும் வகையில், எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. இதைத் தொடர்ந்து, 786 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 5-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அக்டோபர் 5 முதல் குரூப் 2 தேர்வுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்!

கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு செல்போன் எஸ்எம்எஸ், இமெயில் மூலமும் கவுன்சுிலிங்குக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவு, காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu Public Service Commission will conducting Counselling for Group-2 exam aspirants. The counselling will starts on October 5.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia