துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம் !!

Posted By:

மாணவர்களே துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் நாளை முதல் பங்கேற்கலாம் . மாணவர்களே துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு விவரங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் .

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவ மணையில் தொடங்கப்பட்டது

மாணவர்களே பிஎஸ்சி, நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட ஒன்பது துணைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவ மணையில் செப்டம்பர் 19 ஆம் நாள் தொடங்கவுள்ளது .

மருத்துவ துணை படிப்புகளான ஒன்பது படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடிலிருந்து 484 இடங்களிலிருந்தும், தனியார் கல்லுரிகளில் இருந்து 5479 இடங்கள் உள்ளன . கலந்தாய்வு தகுதிப்பட்டியல் கடந்த வெள்ளிகிழமை வெளியிடப்பட்டது . கலந்தாய்வுக்கான அனுமதிகடிதம் சனிக்கிழமை பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது . கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள் அதற்குரிய அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்களுடைய பிறந்த தேதியை கொடுத்து தங்களுக்கான அனுதிசீட்டினை டவுன்லோடு செய்துகொள்ளலாம் .

செப்டம்பர் 19 நாளை முதல் மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வில் பங்குகொள்ளலாம். துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்குகொள்ள தகுதியுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ வீரர்கள் வாரிசு பெயர்கள் 146 பேரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது .

கலந்தாய்வுக்குரிய அனுமதிகடிதத்துடன் மாணவர்கள் வரவேண்டும். மாணவர்களுக்குரிய நேரத்தில்முறையாக பங்கேற்க வேண்டும், தங்களுக்கான கல்லுரிகளை தெரிவு செய்து சேர்க்கையை உறுதிசெய்யலாம் . செப்டம்பர்  தொடக்கத்தில்  ஆரம்பித்த மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை தொடர்ந்து  தற்பொழுது துணை  மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது . விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.  

சார்ந்த பதிவுகள்:

பிஎஸ்சி நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கான சேர்கைக்கான விண்ணப்பம் பெறுங்கள்

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மெடிக்கல் கவுன்சிலிங் !!!!  

மருத்துவ கலந்தாய்வுக்கான இடங்கள் 80% முடிந்தது !! 

English summary
here article tell about counselling date of supplementary medical studies

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia