சென்னை: பி.எஸ்சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு அரசு கல்லூரி இடங்களைத் தேர்வு செய்து அனுமதிக் கடிதத்தைப் பெற்றுச் சென்றுளள்ளனர்.

இந்த நிலையில் சென்னையிலுள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற கவுன்சிலிங்கின் முடிவில் முடிவில் 2,724 இடங்கள் காலியாக இருந்தன.
பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்களில் 555 அரசு இடங்களும் கவுன்சிலிங்கில் நிரம்பிவிட்டன.
தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்ளுக்கான கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற கவுன்சிலிங்கின் முடிவில் 523 இடங்கள் நிரம்பின. பி.எஸ்சி. நர்சிங் - 2,289, பி.பார்ம் - 174, இயன்முறை மருத்துவம் -238, ஆக்குபேஷனல் தெரபி- 23 என மொத்தம் 2,724 இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஏராளமான மாணவிகள் இன்று கவுன்சிலிங்கில் குவிந்துள்ளனர். இன்றைய தினத்திலும் அரசு இடங்கள் காலியாக இருந்தால் அதன் பிறகு 2-ம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












