அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது

Posted By:

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்று தொடங்கியது.

இந்த கவுன்சிலிங் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை படிப்பு பயில மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஏராளமான விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில் இதற்கான கவுன்சிலிங் தொடங்கியது.

அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமை வகித்து, கவுன்சிலிங்கைத் தொடங்கி வைத்தார்.

அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது

மேலும், மாணவர்களின் அட்மிஷன் கடிதத்தையும் அவர் வழங்கினார்.

அண்ணமாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பில் சேர மொத்தம் 11,053 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 644 விண்ணப்பங்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன.

தகுதி பெற்ற விண்ணப்பங்களாக 10,409 தேர்வு செய்யப்பட்டன.

இதில் 29 பேர் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள். தகுதி பெற்ற விண்ணப்பங்களுக்கு ஜூலை 10ஆம் தேதி சமவாய்ப்பு எண்(ரேண்டம் நம்பர்) வெளியிடப்பட்டது.

பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்பில் 1,000 பேரும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்பில் 70 பேரும் பல்கலைக்கழகத்தில் படிப்புக்குச் சேர்க்கப்படவுள்ளனர்.

கலந்தாய்வுக்கு 2,111 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

English summary
Counselling for B.sc agri, B.sc hoticulture has been started in Chidambaram Annamalai University. Minister for higher education Palanippan will inaugurate the counselling process.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia