பி.எட்.விண்ணப்ப விற்பனை படுஜோர்... செப்டம்பர் 28 முதல் கவுன்சிலிங்!!

Posted By:

சென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப விற்பனை படுஜோராக நடந்துள்ளது. கவுன்சிலிங்குக்காக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2015-16 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.

பி.எட்.விண்ணப்ப விற்பனை படுஜோர்... செப்டம்பர் 28 முதல் கவுன்சிலிங்!!

வருகிற 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கவுன்சிலிங் நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டன. சுமார் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் படுஜோராக விற்பனையாயின.

விண்ணப்பங்களை நேற்று(செப்டம்பர் 11) மாலைக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று மாலை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டனர்.

அவர்களுக்கு தபால் மூலம் கவுன்சிலிங்குக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.

இதுதொடர்பாக இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஆர். பாரதி கூறியதாவது:

பி.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், தபால் மூலம் வந்து சேர்ந்துள்ள விண்ணப்பங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

விண்ணப்பித்த மாணவர்ளின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அவர்களுக்கு செப்டம்பர் 16 முதல் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும். மேலும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் அனுப்பப்படும். கல்லூரி இணையதளத்தில் மாணவர்களுக்கு தேவையான விவரங்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.

English summary
Counselling for the B.ed course will begin on sep 28, B.ed Admission secretary R. Bharathi said. Students who applied for the counselling will get the offer letters from sep 16.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia