முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு..!

Posted By:

சென்னை : கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது.

முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு..!

இதில் அசல் சான்திழ் இருந்தால் தான் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்று திட்டவட்டமா கூறியதால், பல மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று மீண்டும் கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜ் மேற்பார்வையில் நடந்த கலந்தாய்வில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 191 இடங்களுக்கும், சுயநிதி பல்க்லைக்கழகங்களில் உள்ள 47 இடங்கள் என மொத்தம் 238 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

English summary
Counseling for Masters Medical Studies took place again, In the Counseling, students were selected for 238 seats.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia