முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று மீண்டும் கலந்தாய்வு....சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

Posted By:

சென்னை : நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு நேற்று நடந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டதாகவும, இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கலந்தாய்வு நடக்க இருப்பதாகவும் மருத்துவகல்வி தேர்வுக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டால் இன்று மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவகல்வி தேர்வுக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவகல்லூரிகள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து முதுநிலை மருத்துவ இடங்கள், முதுநிலை டிப்ளமோ இடங்கள், முதுநிலை பல்மருத்துவ இடங்கள் அனைத்துக்கும் மாநில அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்கைக நடத்தி வருகிறது.

கலந்தாய்வு

இந்தநிலையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிகர்நிலை முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு 2ம் கட்ட கல்நதாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. முதல் கட்டகலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைத்தவர்கள் வேறு பாடப்பிரிவுக்கு மாற்றம் செய்வதற்கும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் வேறு இடங்களை பெறுவதற்கும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வந்தனர்.

போராட்டம்

முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைத்திருந்தவர்கள் தங்களின் அசல் சான்திழ்களை கல்லூரி நிர்வாகத்திட்டம் சமர்ப்பித்து விட்டதால், உணைமச் சான்றிதழ்களுடன் (போனபைடு சர்டிபிகேட்) கலந்தாய்வுக்கு வந்திருந்தனர். ஆனால் தேர்வுக்குழுவினர் அசல் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

அறிவிப்பு

இதனையடுத்து கலந்தாய்வில் பங்கேற்க வந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜ் சுகாதாரத்துறை இணையதளத்தில் இது தொடாபான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

மறுபடியும் இன்று கலந்ததாய்வு

அதில் முதுநிலை இடங்களுக்கு நேற்று நடந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்கு பெறுபவர்கள் உண்மை சான்றிதழுடன் (போனபைடு சர்டிபிகேட்) கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Health Minister Dr. C.Vijayabaskar announced that Re-counseling for Masters Medical Study today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia