போட்டியில் வெற்றி பெற்று மலேசியா டிரிப் செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்!!

Posted By:

சென்னை: சென்னையில் நடைபெற்ற சொற்பொழிவுப் போட்டியில் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக விங்க் டு ஃபிளை என்ற தலைப்பில் சொற்பொழிவுப் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தி ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இணைந்து இந்தப் போட்டியை நடத்தியது.

போட்டியில் வெற்றி பெற்று மலேசியா டிரிப் செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்!!

6, 7, 8, 9, 11 -ம் வகுப்பு மாணவர்களுக்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது அருமையான பேச்சால் பார்வையாளரகளைக் கவர்ந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி ஏஷியா மரியம், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆர். நடராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதில் வெற்றி பெற்ற 8 மாணவரகளுக்கு மலேசியா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் 4 நாள் கல்விச் சுற்றுலாவுக்காக மலேசியாவுக்கு வரும் மே மாதம் செல்லவுள்ளனர்.

மொத்தம் 70 மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்: தமிழ் சீனியர் பிரிவு: எம். ராஜேஷ், எம். சிவசங்கர், பாரதி. ஜுனியர்: சிவகாமி, கீர்த்திவாசன், நரேன்குமார், ஆங்கிலம் சீனியர் பிரிவு: ஐஸ்வர்யா, ஆங்கிலம் ஜூனியர் பிரிவு: ஆயிஷா.

English summary
The Rotary Club of Madras East in association with the Corporation of Chennai organized an "Elocution Competition" captioned "Wings to Fly", exclusively for Corporation School Students of standards 6,7,8,9 and 11. The finals witnessed a flurry of activity and rousing speeches for winning the coveted awards. Ms. Asia Mariam, IAS officer and Mr. R. Nataraj, IPS (Retd.) distributed the prizes to the winning students. The 8 winners will be flown to Malaysia for an educational cum sightseeing trip for 4 days in May 2016. The competition saw over 2000 students from 70 Corporation schools in Chennai participate.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia