தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா! பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

தமிழக அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டு 6 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தற்போது சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் சில பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் அவ்வப்போது அந்தப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா! பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

அதன்படி, தற்போது தமிழக அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டு 6 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அந்தநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தேர்வின்றி தேர்ச்சியான மாணவர்கள்

தேர்வின்றி தேர்ச்சியான மாணவர்கள்

கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடுமையாக இருந்ததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற்றது. அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கில் தளர்வுகள்

ஊரடங்கில் தளர்வுகள்

அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு சார்ந்தவை என அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.

 

பள்ளிகள் மீண்டும் திறப்பு

பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

2021 பொதுத் தேர்வு ரத்து

2021 பொதுத் தேர்வு ரத்து

இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு கொரோனா

ஆசிரியர்களுக்கு கொரோனா

தற்போது, 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். தினமும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில இடங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கத்தினால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதித்து வருகின்றனர்.

தமிழக அரசுப் பள்ளி விடுமுறை

தமிழக அரசுப் பள்ளி விடுமுறை

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசுப் பள்ளி ஒன்றில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்டு 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பள்ளிக்கு மூன்று நாள் விடுமுறை

அரசுப் பள்ளிக்கு மூன்று நாள் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மேற்குறிப்பிட்ட ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அப்பள்ளி வகுப்புகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவி வருகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coronavirus: tamil nadu government school closed for corona
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+