இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் SSC தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசுப் பள்ளி, சிபிஎஸ்இ, பல்கலைக் கழகம், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,இ அரசுத் துறை தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளும் கூட தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், Staff Selection Commission SSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், SSC CHSL, SSC Junior Engineer 2020 உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. SSC தேர்வு ஒத்தி வைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வராமல் இருந்த இந்நிலையில், தற்போது SSC தேர்வு தொடர்பான அறிவிப்பாணையை ssc.nic.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில், மார்ச் 20 ஆம் தேதி முதல் (இன்று) நடைபெறவிருந்த SSC CHSL Tier 1 மற்றும் SSC JE 2020 ஆகிய இரு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.