இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான மெயின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசுப் பள்ளி, சிபிஎஸ்இ, பல்கலைக் கழகம், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,இ அரசுத் துறை தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளும் கூட தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்காக முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த மார்ச் 3 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக வரும் மார்ச் 29 ஆம் தேதி மெயின் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, ரிசர்வ் வங்கி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












