கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த மாதம் முதலே பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே மாதம் மூன்றும் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அப்பல்கலைக் கழக பதிவாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், தேர்விற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












