நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அக்டோபர் 31-ந்தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என முதலமைச்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அதன்படி, வரும் அக்டோபர் 31-ந்தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்க அனுமதி

பள்ளிகள் திறக்க அனுமதி

நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையில் தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் முழுமையாக பள்ளிகள் இயங்கப்பட உள்ளது.

அரசு வழிகாட்டு நெறிமுறை

அரசு வழிகாட்டு நெறிமுறை

கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இதர வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த இந்நிலையில் தொடக்கப் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்

கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அவை மீண்டும் திறக்கப்பட உள்ளன. நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுமையாக நவம்பர் முதல் இயங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளை திறப்பது அவசியம்

பள்ளிகளை திறப்பது அவசியம்

இதுகுறித்து சமீபத்தில் உலக சுகாதார மைய தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில், சிறுவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடுதலாக உள்ளது. இதனால் மாணவ, மாணவியர் மத்தியில் நோயின் தாக்கம் அதிகம் பரவுவதில்லை. பள்ளிக்குச் செல்வதால் தான் கொரோனா பரவுகிறது என்பது தவறான தகவல். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

20 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் பள்ளிகள்

20 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் பள்ளிகள்

தமிழகத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் முழுமையாக திறக்கப்பட உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவை திறக்கப்பட உள்ளது.

உற்சாகத்தில் மாணவர்கள்

உற்சாகத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சரியாக 20 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனைகளைக் கேட்ட தமிழக அரசு அதன்பிறகு மருத்துவ குழுவினருடன் ஆலோசனை செய்த பிறகே நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Corona virus: Tamil Nadu reopens schools for Class 1 to 8th students from November 1
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+