தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கடந்த 2ம் தேதியன்று பல்கலை, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள், அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று கல்லூரி, பல்கலைக் கழகங்கள் திறக்கப்பட்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு மாணவர்கள்
குறிப்பாக, டிசம்பர் 2ம் தேதியன்று முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7ம் தேதியன்று இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
கேள்விக்குறியான மாணவர்களின் நலன்
முன்னதாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்களைத் திறப்பது மாணவர்களின் உடல் நலனை கேள்விக்குறியாக்கி விடும் என பொது மக்கள், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மாநில அரசு கல்லூரிகளைத் திறக்க உத்தரவிட்டது.
ஐஐடி சென்னை
இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் கடந்த இரண்டு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அனைத்துத் துறைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் கொரோனா
தற்போது, அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழக கிண்டி வளாகத்தில் உள்ள விதியில் உள்ள 700 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












