கல்வி கற்றலில் மாணவர்களை ஒன்றிணைக்கும் புதிய திட்டம் அறிமுகம்!!

Posted By:

சென்னை: கல்வி கற்றலில் மாணவர்களை ஒன்றிணைக்கும் புதிய திட்டமான கனெக்டட் லேர்னிங் இனிஷியேட்டிவ் (சிஎல்ஐஎக்ஸ்) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை டாட்டா டிரஸ்ட்ஸ், டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ், மஸாசுஸெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் மூலம் தொடக்கத்தில் நாடு முழுதிலுமுள்ள 1,000 பள்ளிகளைச் சேர்ந்த 1,65,000 மாணவர்களை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி கற்றலில் மாணவர்களை ஒன்றிணைக்கும் புதிய திட்டம் அறிமுகம்!!

அவர்களுக்கு கற்றலில் புதுமை, கற்கும் திறனை அதிகரித்தல், பொது அறிவு உள்ளிட்டவை இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படும்.

8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிஜோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் இது அறிமுகம் செய்யப்படும். ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த கற்பித்தல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் இந்தத் திட்டம் மூலம் நடத்தப்படும்.

இதுகுறித்து டாட்டா இன்ஸ்டிடியூட் சோஷியல் சயின்ஸஸ் இயக்குநர் எஸ். பரசுராமன் கூறியதாவது: மாணவர்களுக்கு நல்ல கல்வியைத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறது டாட்டா நிறுவனம். தற்போது கற்றலில் புதுமை தரும் இணைப்பு கற்பித்தல் திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதத் திட்டமாகும் என்றார் அவர்.

English summary
Around 165,000 students in 1,000 schools across India will benefit from Connected Learning Initiative (CLIx), launched by Tata Trusts, Tata Institute of Social Sciences and Massachusetts Institute of Technology. The CLIx will create new learning experiences and educational opportunities for students in Classes VIII, IX and XI, begining with Mizoram, Telangana, Rajasthan and Chhattisgarh, said Tata Trusts chairman Ratan Tata said here on Wednesday. The programme will offer content in English and regional languages, begining with Hindi and Telugu, and curricula in English, Science, Maths and professional values, besides focusing on professional development for around 4,400 teachers in these four states, he said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia