தமிழகத்தில் அடுத்த ஓரிரு வாரங்களில் வட கிழக்கு பருவ மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால் அதற்கு முன்னதாகவே பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு முதல் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழையின் தீவரத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைப் போன்றே இந்த ஆண்டும் ஏற்படும் சூழல் உள்ளதால் நடப்பு ஆண்டில் பருவமழையால் விடுமுறை விடப்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் ஆசிரியா்கள் தயாராக வேண்டும் என பள்ளி கல்வித் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்தில் இரண்டாம் பருவத் தோ்வுகள் நடத்தப்படும் நிலையில் அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பருவ மழையால் பள்ளி வேலைநாள்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவா்கள் பாதிக்கப்படாமல் கூடுதல் நேரத்தை ஒதுக்கி பாடங்களை நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியாா் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












