நாளை மறுதினம் கல்லுரிகள் திறக்கப்ப்டுகின்றன மேலும் புது ஏற்ப்பாடுகளுடன்

Posted By:

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் கல்லுரிகள் திறக்கப்படுகின்றன . கல்லுரிகள் திறக்கப்பட்டதும் இரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு பிளஸ் ஒன் வகுப்புகள் எடுக்க வேண்டும் என பேராசியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளன . பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்களுக்கு சரியாக பதினொன்றாம் வகுப்பு பாடம் நடத்தாமல் பனிரெண்டாம் வகுப்பு நடத்தப் படுவதால் மாணவர்களுக்கு அடிப்படை பாடம் தெரிவதில்லை என்று பிளஸ் ஒன் வகுப்புகள் முதலாமாண்டு மாணவர்களுக்கு எடுக்க்ப்பட்டு அதன் பின் மாணவர்களுக்கான கல்லுரி பாடங்கள் விவரிக்கப்படும் .

 

கல்லுரிகளில் பிளஸ் ஒன் வகுப்பு எடுக்க முடிவு


காலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி பின் மாணவர்களை வரவேற்று பின் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன . கல்லுரிகளின் செயல்பாடு , பேராசிரியர்களின் அறிமுகம் கல்லுரியின் செயல்பாடுகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த கல்லுரிகள் திட்டமிட்டுள்ளன .
கல்லுரியின் ஒழுங்குமுறைகள் , கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் மற்றும் பேராசிரியர்களிடம் பழகும் முறைகள் அனைத்தும் மாணவர்களுக்கு விளக்கி பள்ளி கல்லுரி வித்தியாசம் அறிந்து செயல் பட மாணவர்களுக்கு கற்று கொடுக்க கல்லுரிகள் திட்டமிட்டுள்ளன .

மாணவ, மாணவியர் உடை கட்டுப்பாடு மற்றும் மொபைல் போன் பயன்பாடு , ஒழுங்கு நடவடிக்கைகள் , வருகை பதிவேடு மற்றும் கட்டணங்கள் செமஸ்டர் தேர்வு விவரங்கள் . கல்லுரி நிர்வாகங்களின் சிறப்புகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விளக்கப்பட்டு விவரிக்க கல்லுரிகளில் ஏற்பாடுகள் செய்துள்ளன .

English summary
here article mentioned about college opining along with new ceremony

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia