கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் இளம் தொழில் நுட்பவியல், உயிர் தகவலியல் உள்பட 13 வேளாண் பட்டப்படிப்புகள் உள்ளன.
இன்று நடைபெறும் சிறப்பு கலந்தாய்விற்கு 85 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு கலந்தாய்வில் 32 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சிறப்பு கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களில் 32 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மொத்தம் உள்ள 2,860 காலி இடங்களில் சேர 57 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் மாணவர்கள் 21 ஆயிரத்து 15 பேர், மாணவிகள் 28 ஆயிரத்து 14 பேர், ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 49 ஆயிரத்து 30 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்த படிப்பில் சேருவதற்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்த கல்வியாண்டில் புதிதாக குடியாத்தம், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் மேலும் 2 வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. சிறப்பு இடஒதுக்கீடுக்கான கலந்தாய்வு இன்று ஜூன் 16ந் தேதி நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு 19ந் தேதி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications












