ஐஐடி தேர்வுக்குத் தயாராக பழங்குடி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி

Posted By:

சென்னை: ஐ.ஐ.டி., போட்டித் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு தயாரகா இலவச அளிக்கப்பட உள்ளது. இதற்காக பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான பணிகளை அரசு நிறுவனமான தாட்கோ நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்கலைக்கழகங்கள் உள்பட அரசுத் துறை அமைப்புகள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், பயிற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் 50 மாணவ-மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு தகுதியான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பயிற்சிக்கு மாணவ-மாணவிகளைச் சேர்க்கும் பணிகள் தொடங்கும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Coaching for ST students has been arranged by Tamilnadu Government. 50 ST students will the coaching for the IIT Entrance and Competitive exams.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia