தோல் தொழில்முறைப் பயிற்சி பெற வேண்டுமா... எஸ்.சி. பிரிவினருக்குக் காத்திருக்கிறது வாய்ப்பு!!

Posted By:

சென்னை: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தோல் தொழில்முறை பயிற்சிகளைப் பெற எஸ்.சி. இனத்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்டோருக்கு தோல், தோல் பொருள்களை வெட்டுதல், அச்சுப்படி வெட்டுதல், தையல், இறுதி நிலை தையல் உள்ளிட்ட பயிற்சிகளை 35 நாள்கள் அளிக்க உள்ளன. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 18 முதல் 50 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி பெற குறைந்தது 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக்கான வழிமுறை: விண்ணப்பங்களை அடையாறில் உள்ள நிறுவன மையத்தில் நேரடியாகப் பெற்றலாம். சாதி, வருமானம், வயது, கல்வி, முகவரி, ஆதார்- குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

நவம்பர் 2-வது வார்த்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். பயிற்சியின்போது உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும். பயிற்சி நேரத்தில் உணவும் அளிக்கப்படும். வேலைவாய்ப்புக்கும் வழிகாட்டப்படும்.

விவரங்களுக்கு 044-24437217, 044-24437109 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Leather Technology Coaching has been arranged for Sc students. For more details students can call 044-24437217, 044-24437109. In November Second week the coaching classes will be start, Chennai district collector has said in a press release.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia