ஐஐடி, என்ஐடி-களில் சேர ஒரே நுழைவுத் தேர்வு: மத்திய அரசு பரிசீலனை

Posted By:

சென்னை: ஐஐடி, என்ஐடி, பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதேபோல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஐஐடி, என்ஐடி-களில் சேர ஒரே நுழைவுத் தேர்வு: மத்திய அரசு பரிசீலனை

இந்தநிலையில் ஐஐடி, என்ஐடி, பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே ரேங்க், ஒரே கவுன்சிலிங் என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மத்திய மனித வள அமைச்சகம் முடிவு செய்து அதை அமல்படுத்த பரிசீலித்து வருகிறது.

இதற்காக உள்ள தடைகளையும் அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

திறமையான மாணவர்கள் உயர்கல்வியில் சேர இது வழிவகுக்கும். மேலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதல்களையும் இதுகுறைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு வரும் நவம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

English summary
While the expert committee is planning to submit the report on "one exam, one rank, one counselling' for admissions into IITs/NITs/IISERs and other engineering institutes, Ministry of Human Resource Development is trying to clear all the roadblocks and making it reality. The committee is due giving the report its report in first week of November which was decided in the IIT Council meet earlier this month.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia