சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted By:

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு .இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவானது நேற்று வெளியிடப்பட்டது . இன்றைய காலகட்டத்தில் 5/10 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கனவு என்பது நாம் அறிந்ததே ஆகும் .

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வானது வெளியிட்ட தேர்வு முடிவில்
இந்திய அளவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நந்தினி கே.ஆர் முதலிடம் பெற்றுள்ளார் .
இந்திய ஆட்சிப்பணி தேர்வு முடிவு இந்திய அளவில் முதலாவதாக கர்நாடக மாநில மாணவி நந்தினியை தொடர்ந்து இரண்டாவது மதிபெண் பெற்ற அல்மோல்செர்சிங் பேடி ,பிட்ஸ் பிலானி ,
ரோனானி கோபால் கிருஷ்ணா ஆந்திரா மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் .

இந்திய ஆட்சிப்பணி நடத்தும் தேர்வானது முதண்மை,முக்கிய, நேரடிதேர்வு கொண்டது . மூன்று நிலை கடந்து அறிவிக்கப்படும். தேர்வு முடிவு அகில இந்திய அளவில் தரவரிசையில் யூபிஎஸ்சியால் அறிவிக்கப்படுகிறது .

2016-2017க்கான யூபிஎஸ்சி தேர்வில் 11.37 லட்சம்பேர் விண்ணப்பித்துள்ளனர் கடந்தவருடத்தைவிட மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன .
5 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள் அவற்றில் 15,445பேர் முதண்மை தேர்வுக்கு தகுதி பெற்று எழுதினர் . 2955 பேர் நேரடி தேர்வுக்கு அழைக்கப்பட்டு இறுதியாக 1099 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .

பொது பிரிவில் 500 பேரும்,பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவில் 347 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 163 பேரும்,எஸ்டி பிரிவில்89 பேர் என மொத்தம் 1099 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

மத்திய தேர்வு ஆணையத்தின் கீழ் வருடா வருடம் காலிப்பணியிடங்கள் பொருத்து தேர்வு நடத்தப்படுகிறது . இதில் இந்திய ஆட்சிப்பணியின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃஎஸ்,ஐஆர்எஸ் போன்ற இருப்பத்துநான்கு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பபடும் .இருபத்தொரு வயது நிரம்பிய மற்றும் பட்டதாரிகள் இந்த தேர்வை எழுத தகுதிப்படைத்தவர்கள் ஆவர் .

English summary
here article mentioned about result of civil service exams .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia