நாடுமுழுவதும் சிவில்சர்வீஸ் தேர்வு முடிவு கொண்டாட்டங்கள் !

180 ஐஏஎஸ்,150 ஐபிஎஸ் , 45 ஐஎஃப்எஸ் மற்றும் குரூப் ‘ஏ' மற்றும் குரூப் ‘பி' பதவிகளுக்கு 824 பேர் தகுதி பெற்றுள்ளனர் .இவற்றில் 44 பேர் மாற்றுதிறனாளிகள் ஆவர் .

By Sobana

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவானது வெளியிடப்பட்டது . நாடு முழுவதும் லட்சக்கணகானோர் பங்கேற்ற தேர்வில் பெரிய அளவில் போட்டித்தன்மைதாண்டி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது . 180 ஐஏஎஸ்,
150 ஐபிஎஸ் , 45 ஐஎஃப்எஸ் மற்றும் குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி பதவிகளுக்கு 824 பேர் தகுதி பெற்றுள்ளனர் .இவற்றில் 44 பேர் மாற்றுதிறனாளிகள் ஆவர் .

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப்பணி தேர்வில் முதண்மை தேர்வை 18000 பேர் எழுதினார்கள் .

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப்பணி தேர்வில் முதண்மை தேர்வை 18000 பேர் எழுதினார்கள் . சிவில் சர்வீஸ் மெயின்ஸ் என அழைக்கப்படும் முக்கிய தேர்வில் தமிழ்நாட்டில் 3000 பேர் பங்கேற்று எழுதினார்கள் . சிவில் சர்வீஸ் முக்கிய தேர்வானாது டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரை நடைபெற்றது . தமிழ் நாட்டில் 210 பேர் சிவில் சர்வீஸ் தேர்வின் நேரடிதேர்வில் பங்கேற்றனர் . விருதுநகரை சேர்ந்த விவசாயி முருகன் என்பவரின் மகன் பிரதாப் வயது 23 இந்திய அளவில் 21 ஆம் இடத்திலும் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்திய அளவில் தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பல கடினசூழல்களால் பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் மட்டும் யூபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டு 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . காஷ்மீர் மக்களின் உறுதி தன்மையை இவர்களது வெற்றி வெளிப்படுத்திவிட்டது . இந்திய அளவில் பத்தாம் இடத்தினை காஷ்மீரின் பிலால் மொகியுத்தீன் பாட் என்பவர் பெற்றார் . அவர் ஐஎஃப்எஸ் ஆன இண்டியன் ஃபாரஸ்ட் ஆஃபிசராக லக்னோவில் பணிபுரிகிறார்.மூன்று முறை யூபிஎஸ்சி தேர்வில் தோற்று பின் வெற்றி பெற்றுள்ளார். ஜாஃப்ர் இக்பால் 39 ரேங்க் பெற்றுள்ளார் .சையது ஃபருக்குதீன் ஹமீத் 86 ரேங்க் மேலும் பிஸ்மா குவாசி என்ற பெண்ணும் 115 வது இடம் பெற்றுள்ளார் . காஷ்மீரின் இந்த எழுச்சி இந்தியாவுக்கு சாதகமாகும் .

இதுபோன்ற கொண்டாட்டங்கள் பல மாநிலங்களில் நடைபெறுகின்றன. சிவில் சர்வீஸ் தேர்வின் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் உள்ள தேர்வு எழுதுவோர்க்கும், தேர்வு எழுத ஆர்வம் கொண்டோர்க்கும் உந்துதல் அளிக்கும் .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article mentioned about celebration of Civil service success of candidates lists
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X