சித்திரகலா ஓவியப்போட்டி பங்கேற்க ஓடி வாங்க குழந்தைகளே !!

Posted By:

கேரியர் இந்தியா கல்வித்தளம் நடத்தும் குழந்தைகள் தினச்சிறப்பு போட்டியாக ஒவியப்போட்டியில் பங்கேற்க மாணவர்களே உங்களுக்கான அருமையான வாய்ப்பு .

சித்திரகலா ஒவியப்போடியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கேரியர் இந்தியா கல்வித்தளம் :

குழந்தைகளே சுட்டி குழந்தைகளே கேரியர் இந்தியா கல்வித்தளம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி சமபந்தப்பட்ட தகவலகள் , மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற தகவல்கள் அத்துடன் வேலை வாய்ப்பு , நுழைவு தேர்வு , அகில இந்திய கல்வி செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் அறிவிக்கின்றது .

குழந்தைகள் தின கொண்டாட்டம் :

குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடும்  விதமாக மாணவர்களுக்கு    ஒவியப்போட்டியை " சித்திரகலா "  என்ற தலைப்பில் கேரியர் இந்தியா தளம் நடத்துகிறது . இந்திய அளவில் நடக்கும் இப்போட்டியில் மாணவர்கள் பங்குகொள்ளலாம் .

குழந்தைகள்தினத்தை முன்னிட்டு நடக்கும் ஒவியப்போட்டியின் முடிவானது நவம்பர் 14 ஆம் நாள் அறிவிக்கப்படும் . சித்திரகலா ஒவியப்போட்டியில் பங்கு பெற விருப்பமா குழந்தைகளே மாணவர்களே உங்களுக்கான அறிவிப்புக்கள்

சித்திரகலா ஒவியப்போடியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

போட்டியின் பெயர் : சித்திரகலா

போட்டியின் தொடக்கம் : இப்போதே தொடங்குங்கள்

பங்கேற்பாளர் : சித்திரகலாவில் பங்கேற்க 6 முதல் 17 வயது வரையுள்ளோர் பங்கேற்கலாம்

சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பு :

சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பானது குழந்தைகளின் வயதுகேற்ப மாறுபடும்

4 வயது முதல் 7 வரை ( நானும் எனது நட்பும்)
8 வயது முதல் 10 வரை ( எனது விருப்ப விளையாட்டு பகுதி)
11 வயது முதல் 13 வரை ( எனது கனவு)
14 வயது முதல் 17 வரை (எனது நகரம் )

சித்திரகலாவில் பங்கேற்க மாணவர்கள் தங்களது ஓவியப்படைப்புகளை அனுப்ப எங்களின் அதிகாரபூர்வ தளத்தில் studentscornor@oneindia.co.in  பதிவு செய்ய வேண்டும்

விதிமுறைகள் :

மாணவர்கள் உங்களது பள்ளி மற்றும் இல்ல முகவரி சரியாக எழுதியிருக்க வேண்டும் . விவரங்கள் சரியாக இல்லையெனில் உங்களது படைப்புகள் நிராகரிக்கப்படும் 

மாணவர்கள் உங்களது படைப்புகளில் மேல் சித்திரகலா என்ற தலைப்பின் கீழ் உங்கள் வயதுகேற்ற கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பின்ப்பற்றி ஓவியம் தீட்டப்பட்டிருக்க வேண்டும் .

வரையப்பட்ட ஓவியங்களை சிறப்பான தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் .

மாணவர்களின் சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும் . நாங்கள் உங்களின் படைப்பாற்றலை அங்கிகரிக்கின்றோம் நீங்களும் உங்களது படைப்பாற்றலை திறம்பட வெளிப்படுத்துங்கள் . பெற்றோர்களே நீங்களும் உங்களது மழலை அரும்புகளுக்கு உதவுங்கள் .

மாணவர்களின் படைப்பாற்றைலை அனுப்பும் பொழுது சித்திரகலா என்ற தலைப்பின் கீழ் சிறப்பான ஓவிய புகைப்படத்தை எடுத்து இமெயிலில் அனுப்ப வேண்டும் .

காலக்கெடு :

மாணவர்கள் தங்கள் படைப்பை அனுப்ப இறுதி தேதி நவம்பர் 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . நவம்பர் 14 ஆம் நாள் சித்திரகலா ஒவியப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் .

பரிசு :

வெற்றி பெறும் சிறப்பான ஓவியங்கள் எங்கள் கேரியர் இந்தியா தளத்தில் உலா வரும் அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி சான்றிதழ் அளிக்கப்படும் .

ஓடிவிளையாடு பாப்பா ,
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா
எங்கள் சித்திரகலா கூடத்தில் பங்கேற்க வா பாப்பா

இப்படிக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களுடன் உங்கள் கேரியர் இந்தியா !!

English summary
here article tell about Chitrakala competition for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia