நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

குழந்தைகள் தின கொண்டாட்டத்தை நாடு முழுவதும் கொண்டாடும் மக்கள்

By Sobana

குழந்தைகள் தினம் இன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று, நாட்டு மக்கள் அன்போடு நேரு மாமா என்று அழைக்கும் நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று.

குழந்தைகள் தின கொண்டாட்டம்

ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு மிகவும் விருப்பமான குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டு மக்களிள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன் குறித்து சிந்தித்தவர் ஜவஹர்லால் நேரு. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களின் நலன் குறித்து ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஐந்தாண்டு திட்டங்களில் மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது குழந்தைகள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டங்களே.

நாடு முழுவதும் நேரு மாமாவின் பிறந்த தினம் கருதி குழந்தைகளுக்கான கொண்டாட்டம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எண்ணம், கல்வி, செயல் சிறக்க அரசும் திட்டங்களை தீட்டி வருகின்றது .

நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்:

  • குழந்தைகள் தின கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) விமர்சையாக குழந்தைகளை வைத்து கொண்டாடுகின்றனர்.
  • அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான விதவிதமான வண்ண அழங்காரங்களுடன் அவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்.
  • இனிப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும்
  • வண்ண பூக்கள் அழங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்.
  • குழந்தைகளுக்கு இன்று மாறுவேட போட்டிகள் நடத்தப்படுகின்றது.
  • பால் திவாஸ் என நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளில் தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு புதிதாக பரிசுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாவார்கள்.
  • இந்த தேசத்தின் மிகப்பெரிய நாளைய உந்துசக்தி இன்றைய குழந்தைகள் ஆவார்கள் என்பதை இந்த சமுகம் உணர்ந்துள்ளது.
  • குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்வது , அவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசும் கொண்டு வருகிறது.

குழந்தைகளின் ஆரம்பக் கல்வியினை உறுதி செய்வது நமது கடமையாகும். இதனை வழங்க அனைத்து பெற்றோர்களும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

ஓவியப்போட்டி :

நமது ஒன் இந்தியாவின் கல்வித்தளமான தமிழ் கேரியர் இந்தியாவும் குழந்தைளை கொண்டாடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தின கொண்டாட்டம் நிகழும் வேலையில் ஒன் இந்தியாவும் நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஓவியப் போட்டிக்கு அழைப்பு விடுத்தது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கனக்கான ஓவியங்கள் குழந்தைகளிடம் இருந்தே வரப்பெற்றுள்ளன. இன்னும் சற்றுநேரத்தில் ஒவியப் போட்டியின் முடிவுகளை வெளியிடவுள்ளது.

கேரியர் இந்தியா வழங்கும் கேரியர் இந்தியா வழங்கும் "சித்ரகலா 2018" ஓவியப் போட்டி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about children's day special
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X