தமிழக அரசின் குழந்தைகள் தின கொண்டாட்டம் மற்றும் மாணவர்களுக்கு உதவும் எண்கள்

Posted By:

தமிழக அரசு நேற்று குழந்தைகள் தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்தியது மாணவர்களுக்கான குழந்தைகள் தின விழா பள்ளிக்கல்வித்துறை நடத்தியது.

அரசின் குழந்தைகள் தின கொண்டாட்டம் மற்றும் உதவும் எண்கள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை , கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிட்டியில் வென்றவர்களுக்கு கல்வித்துறை அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

மாணவர்கள் கல்வி சேவை மையம் :

மாணவர்களுக்கு பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் தங்கள் எதிர்கால படிப்பை அறிந்துகொள்ள அவர்களுக்கு சரியாக வழிக்காட்ட மாணவர்களுக்கான ஹெல்ப் லைன் அறிமுகப்ப்டுத்த அரசு முடிவு செய்துள்ளது நவம்பர் 24 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு உதவி சேவை மையம் செயல்படும் என கல்வி துறை அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் கல்வி சம்மந்தமான ஆலோசனைகள் பெற மாணவர்களுக்கான உதவி எண்கள் 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம். வேலைவாய்ப்புக்கு உதவும் படிப்புகள் அத்துடன் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த ஆலோசணைகள் அனைத்தும் மாணவர்கள் பெறலாம்.
தமிழகத்தில் 593 பொறியியல் கல்லுரிகள் உள்ளன அவற்றில் பட்டம் பெறும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பெற சரியான வழிகாட்டுதல்களின்றி காணப்படுகின்றனர் அத்தகைய மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற தக்க ஆலோசணைகளை உதவி மையங்கள் வழங்கும்.

தமிழ்நாட்டில் 12 லட்சம் மாணவர்க்ள் கற்றலில் குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். அவர்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும்.

புதிய பாடத்திட்டம் :

நீட் தேர்விலிருந்த விலக்கு பெறுவதில் தமிழ அரசு முணைப்பு காட்டி வருவதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களின் திறன் மேம்பாடிற்காக சிறப்பான கல்வியை வழங்க புதிய பாடத்திட்டத்தினை நவம்பர் 20இல் அதுகுறித்து அறிக்கை அரசு வெளியிடும் என அறிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ்:

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் கனவு கொண்ட மாணவர்களுக்கான தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள மைய நூலகங்களில் சிறப்பு புத்தகங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.நூலகங்களை சிறப்பாக மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிப் இல்லாத ஸ்மார்ட் கார்டு:

தமிழகத்தில் சிப் இல்லாத ஸ்மார்ட் கார்டு 1.25 கோடி மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி வழங்க அரசு வழங்கவுள்ளது.

சார்ந்த பதிவுகள்:

ஜனவரியில் ஜாம் ஜாமென டிஜிட்டலாக்கப்படும் தமிழக பள்ளிகள் !!

டிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியா

English summary
here article tell about new announcements for Tamil nadu school studnets

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia