தமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூரிகள்.. 2017 - 2018 கல்வியாண்டில்.. முதல்வர் அறிவிப்பு..!

Posted By:

சென்னை: 2017-20108ம் கல்வியாண்டில் விழுப்புரம், இராமநாதபுரம், தருமபுரி ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் புதிதாக மூன்று சட்டக்கல்லூரிகள் இந்த கல்வியாண்டில் தொடங்கப்படும்.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் அதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய 3 சட்டக்கல்லூரிகள்

2017-2018ம் கல்வியாண்டில் விழுப்புரம், இராமநாதபுரம், தருமபுரி ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லுரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

 

 

80 மாணவர்களுக்கு இடம்

3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் சட்டக்கல்லூரி படிப்பில் சுமார் 80 பேர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

மூன்று புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்காகவும் இதர தேவைகளுக்காகவும் 6.8% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அம்பேத்கார் பல்கலை மூலம் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவ மாணவியர்கள் புதிதாக தொடங்கப்படும் சட்டக்கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Palanisamy said that steps will be taken to start new Law Colleges in Villupuram, Ramanathapuram and Dharmapuri in the academi

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia