சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை.. வெளியானது அறிவிப்பு

Posted By:

சென்னை : சென்னை பல்கலைக்கழகம் 2017-18ம் ஆண்டிற்கான முதுநிலை டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்றத் துறையில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை.. வெளியானது அறிவிப்பு

டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 அல்லது இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆராய்ச்சி படிப்பில் சேர விரும்புபவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆராய்ச்சி படிப்பில் சேரலாம்.

தமிழ், ஆங்கிலம், மானிடவியல், வரலாறு, குற்றவியல், வாழ்வியல் கல்வி, பொது நிருவாகம், அரசியல் அறிவியல், பொருயியல், தடய அறிவியல், நரம்பியல், மருத்துவ நுண்ணுயிரியல், விலங்கியல், உயிர்வேதியியல், ஜியாலஜி, புவியியல் தகவல் நுட்பம், புள்ளியியல் மற்றும் யோக உள்ளிட்ட அனைத்து துறைப் படிப்புக்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ளன.

முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புக்கு, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புக்கன நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 26 மே 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். அதற்கு மேல் விண்ணப்பிப்பவர்கள் 09 ஜூன் 2017ம் தேதி வரை உரிய அபராத தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: முதுநிலை படிப்புக்கு 19 ஜூன் 2017. டிப்ளமோ படிப்புக்கு 31 ஜூலை 2017.

மேலும் விபரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Madras University is the mother of almost all the old Universities of southern India. Madras University 2017 Admission began for Various Courses.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia