ஃபோர்டு உதவித் தொகையை வென்றார் சென்னை அண்ணா பல்கலை. மாணவி!

Posted By:

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஆன்சி ஃபிலிப் இந்தியாவிலேயே முதல் முறையாக ஃபோர்டு நிறுவனத்தின் மதிப்புமிக்க "ஆலன் முலாலி லீடர்ஷிப்' உதவித் தொகையை வென்றுள்ளார்.

இந்த உதவித்தொகையை வென்றதன் மூலம் சென்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார் ஆன்சி ஃபிலிப்.

ஃபோர்டு உதவித் தொகையை வென்றார் சென்னை அண்ணா பல்கலை. மாணவி!

இதன் மூலம் ஒரு முறை உதவித் தொகையாக அவருக்கு ரூ. 6.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் ஆலன் முலாலியின் அறிவியல், தொழில்நுட்பத் துறை அனுபவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த உதவித் தொகைத் திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலக அளவில் ஆண்டுக்கு 10 மாணவர்களுக்கு, ஒரு முறை உதவித் தொகையாக தலா ரூ. 6.5 லட்சம் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

2015-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை மாணவி ஆன்சி ஃபிலிப் இந்த உதவித் தொகைக்குத் தேர்வாகியுள்ளார்.

ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Ancy Philip, an engineering student from the Department of Computer Science at the Chennai-based Anna University, has become the first Indian recipient of the Alan Mulally Leadership in Engineering Scholarship.The USD 10,000 scholarship is part of the company’s global initiative to honor the outstanding service of Alan Mulally, the company’s former CEO.Being the first India recipient of this coveted scholarship, Ancy Philip received the award from Nigel Harris, President and Managing Director, Ford India and Dave Dubensky.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia