யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. மொத்தம் தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் மகன், மகள்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை ஆணையரான அதுல் ஆனந்தின் மகள் ஈஸானி. இவர் ஐஏஎஸ் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதி வந்தார். அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளின்படி இவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐஆர்எஸ் பணிக்கு தேர்வான அவர் 4-வது முயற்சியில் ஐஏஎஸ் இலக்கை எட்டி தனது சாதனையைப் படைத்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்தத் தேர்வு முடிவுகளின்படி அகில இந்திய அளவில் 1,016 பேர் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 45 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சென்னையைச் சேர்ந்த மாணவியான ஈஸானி அகில இந்திய அளவில் 79-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இவர் தமிழக அரசில் தொழிலாளர் நல ஆணையராக பணியாற்றி வரும் அதுல் ஆனந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஈஸானி. இவர், கடந்த ஆண்டு தேர்வு எழுதியபோது ஐஆர்எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 4-வது முறையாக தற்போது தேர்வு எழுதி ஐஏஎஸ் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக தனது தந்தை பணியாற்றி வருவதால் அந்த ஐஏஎஸ் அரசு பணி மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், அதனால்தான் அந்தத் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாகவும் ஈஸானி கூறியுள்ளார்.
ஐஏஎஸ் பயிற்சி முடிந்து அதிகாரியாக பதவியேற்றதும் ஏழைகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன் என்று ஈஸானி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












