சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

சென்னை : சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், மூத்த கணக்கு அதிகாரி, நிதி பிரதி கட்டுப்பாட்டாளர் (டெப்டி கன்ட்ரோலர் ஆப் பினான்ஸ்) ஆகிய பணியிடங்களுக்கு 322 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பணிக்குறித்த விபரங்கள் -

நிறுவனம் - சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் - சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி

கல்வித் தகுதி - பி.இ / பி.டெக் / பி.காம் / ஏதேனும் பட்டப்படிப்பு

காலியிடம் - 322

வேலை இடம் - சென்னை

கடைசி தேதி - 5 ஏப்ரல் 2017

கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட கல்கலைக் கழகத்தில் பி.இ / பி.டெக் / பி.காம் / ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை பயின்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு - 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (முன்னாள் இராணுவத்தினர் 53 வயது வரை விண்ணப்பிக்கலாம்)

பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்கள் . 18 வயது முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம். (முன்னாள் இராணுவத்தினர் 48 வயது வரை விண்ணப்பிக்கலாம்) யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்து வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நிதியுதவி பெறுபவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நிதியுதவி பெறுபவர்கள் தகவல்கள் விரைவில் சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரியக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கவும்.

காலியிடங்கள் குறித்த தகவல்கள் -

உதவி பொறியாளர் (மெக்கானிக் / சிவில்) - 113 காலியிடங்கள்

உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) - 45 காலியிடங்கள்

இளநிலை உதவியாளர் - 155 காலியிடங்கள்

மூத்த கணக்கு அதிகாரி - 3 காலியிடங்கள்

நிதி பிரதி கட்டுப்பாட்டாளர் (டெப்டி கன்ட்ரோலர் ஆப் பினான்ஸ்) - 6 ஆகிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் - சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம் -

எஸ்சி (ஏ) எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 250 விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு ரூபாய் 500 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 5 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு www.chennaimetrowater.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Chennai Metropolitan Water Supply and Sewerage Board-CMWSSB Recruitment for Assistant Engineer, Junior Assistant, Senior Accounts Officer, Deputy Controller of Finance.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia