டிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்து முடிந்த வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வேளாண்மை அதிகாரிகள் பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர், தங்களது பெயர் தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என புகார் அளித்து தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வேளாண்மை அதிகாரி பணிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications












