சென்னை பெருநகர மருத்துவமணையின் செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

Posted By:

பெருநகர சென்னை மாநகரட்சியின் தொற்றுநோய் மருத்துவ மனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநாகராட்சி ஆனையர் கார்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்கள் கிடைக்கின்றன .

செனை பெருநகர ஆணையர் செவிலியர் பயிற்சி குறித்து அறிவித்தார்

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதார கட்டுப்பாட்டில் இயங்கும் தொற்றுநோய் மருத்துவமணையின் இரண்டாண்டு துணை மருத்துவ படிப்பான செவிலியர் பயிற்சி 2017- 2018 ஆம் ஆண்டிற்க்கான 40 இடங்கள் சேர்க்கைக்காக வெளியிடப்பட்டுள்ளன .

இப்பயிற்சி வகுப்பில் சேர பெருநகர மாநாகராட்சி பள்ளியில் படித்தவர்களுக்கும் , பெரு நகர மாநகராட்சியில் பணி புரிந்தோர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது . அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படித்த இளம் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் . உதவி செவிலியர் பயிற்சிக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . ஆகஸ்ட் 16 முதல் 31 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பகட்டணம் ரூபாய் 50 செலுத்தலாம் , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 4 ஆம் தேதிவரை கொடுக்கலாம் . இது தொடர்பான விவரங்களை தொடர்பு கொள்ள 044-2591 2686 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளார் .

சார்ந்த பதிவுகள்: 

பிஎஸ்சி நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கான சேர்கைக்கான விண்ணப்பம் பெறுங்கள் 

மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா

English summary
above article tell about medical assistant nurse course by chennai corporation

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia