அகில இந்திய மருத்துவ தேர்வு முடிவுகளுக்கு தடை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted By:

டெல்லி: அகில இந்திய மருத்துவ முதன்மை தேர்வு எனப்படும் எ.ஐ.பி.எம்.டி. தேர்வு முடிவுகளை இம்மாதம் 10 தேதி வரை வெளியிட வேண்டாம்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் 15 சதவீத மாணவர் சேர்க்கை ஏ.ஐ.பி.எம்.டி தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.இந்த தேர்வு கடந்த மாதம் 3 இல் நடந்தது. அப்போது ஹரியானாவில் நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

அகில இந்திய மருத்துவ தேர்வு முடிவுகளுக்கு தடை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரபுல்லா சி பாண்ட், அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக அரியானா போலீசாரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்தபின் இந்த விஷயத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே இம்மாதம் 10 ஆம் தேதிவரை தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ வெளியிடக் கூடாது" என்று உத்தரவிட்டுள்ளனர்.

English summary
The Supreme Court on Wednesday asked the Central Board of Secondary Education not to declare results of the All India Pre-Medical Test till June 10.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia