தேர்வு முறையில் மாற்றம் செய்யுங்கள்... மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை....!

Posted By:

சென்னை : மத்திய அரசு மாநில அரசுக்கு தேர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வியில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பள்ளிக் கல்வியில்,ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில மாநிலங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், பொது தேர்வு முறை உள்ளது.

மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

தேர்வு முறையில் மாற்றம் செய்யுங்கள்... மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை....!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது. இதனால், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்ப்பதில், கல்வி நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மனிதவள அமைச்சகம் சார்பில், மாநில கல்வி அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நடத்தப்பட்டது.

அப்போது, தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களின் கற்றல், சிந்தனை திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், வினாத்தாள் தயாரித்தல் விஷயத்தில், கூடுதல் அக்கறை காட்டவும் வலியுறுத்தப்பட்டது.

சி.பி.எஸ்.இ போன்று, நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை, விடைத்தாள் திருத்த முறையை கொண்டு வருவது குறித்தும், அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் உயர் கல்வியில் சேரும்போது குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

English summary
The Central Government has urged the state government to change the mode of selection. Each in schoolEach choice is followed in the state.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia