குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணி: ஆக.24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

Posted By:

சென்னை: குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், வேளாண் உதவி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு(மொத்தம் 117 இடங்கள்) கடந்த பிப்ரவரியில் தேர்வு நடைபெற்றது. அதில், 3,300 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24 ஆம் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணி: ஆக.24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்ச்சி பெற்றவர்கள் அந்த தினத்தில் கலந்துகொண்டு சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.

இதேபோல, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு(மொத்தம் 417 இடங்கள்) கடந்த ஏப்ரலில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 3,236 பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள், செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்ச்சி பெற்றவரர்கள் அந்த தினத்தில் கலந்துகொண்டு சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் (www.tnpsc.gov.in) என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Certificate Verification process will be conductd in TNPSC from August 24 for the psot of Child welfare project officer. For more details logon into www.tnpsc.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia