நர்ஸ் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்

Posted By:

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர்(நர்ஸ்) நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 7,243 நர்ஸ் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 28-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இதில் 38,116 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர்.

இதில் 6,792 பணியிடங்களுக்கு பெண் செவிலியர்களும், மீதம் உள்ள 451 பணியிடங்களுக்கு ஆண் செவிலியர்களும் தேர்வு செய்யட உள்ளனர். இந்தத் தேர்வில் பங்கேற்றவர்கள் பெற்ற மதிப்பெண் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்தந்த பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 10 வேலை நாள்களுக்கு இந்தப் பணிகள் நடைபெறும்.

முதல் நாளில் 451 பேர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்ததும், தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதுதொடர்பான சந்தேகம் அல்லது புகார் இருந்தால் அதனை mrb.tn@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம். அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Certificate verification process has been started for Nurses recruitment in various hospitals. The process will be held for next 10 days in DMS campus, teynampet.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia