சுகாதார புள்ளியியலாளர் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Posted By:

சென்னை: வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் (Block Health Statistician), தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வு நடந்தது.

சுகாதார புள்ளியியலாளர் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தகவல் விரைவஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

English summary
TNPSC has announced certificate verification process for the post of Block Health Statistician and Statistical Assistant. For more details aspirants can logon into www.tnpsc.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia