பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8ந் தேதி ஆரம்பம்..!

Posted By:

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேராமல் இருப்பின் அவர்கள் சார்பான விண்ணப்பங்களை நேரில் அல்லது தபால் மூலம் 01.05.2017 முதல் 10.05.2017 வரை வழங்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8ந் தேதி ஆரம்பம்..!

இவ்வாறு பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து திருத்திய மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு பாடவாரியாக காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட உள்ளவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு அழைப்பு கடிதம் தபால் மூலமாக அனுப்பப்பட மாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்பு கடிதத்தை எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 8ந் தேதி முதல் 10ந் தேதி வரை சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் நடைபெறும்.

மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Certificate verification for graduate teacher work begins on June 8th, The Government Girls' Hr. Sec. School in Ashok nagar, Chennai, will be held at 10am.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia