அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சி.இ.ஓ., டி.இ.ஓ.க்கள் ஆலோசனை

Posted By:

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்(சி.இ.ஓ), மாவட்டக் கல்வி அலுவலர்கள்(டி.இ.ஓ) கூட்டம் சென்னையில் ஜூலை 29-ம் தேதி நடைபெற உள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், இடையில் நின்ற மாணவர்கள் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை:  சி.இ.ஓ., டி.இ.ஓ.க்கள் ஆலோசனை

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், 2015-16-ஆம் கல்வியாண்டில் 6, 9, 11-ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையுடன் இந்த ஆண்டுள்ள வேறுபாடு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை எடுத்துவர வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களையும் பள்ளிக் கல்வி இயக்ககம் கோரியுள்ளது.

சி.இ.ஓ.க்கள், டி.இ.ஓ.க்கள் தரும் விவரங்களைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

English summary
School Education Department has arranged CEO, DEO`s meeting in Chennai which will be held on July 29.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia