6 வயது முடிவடைந்தால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: கல்வி அமைச்சகம் அதிரடி...!!

6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய கல்வி அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இது பல்வேறு தரப்பினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வரவுள்ளது. 2020-ல் மத்திய அரசு அறிமுகம் செய்து புதிய கலவி கொள்கை நாடு முழுவதும் கடந்த கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு பிரீ- கேஜி முதல் 2-ம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

இதனை மற்ற மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. இந்நிலையில் 2024-25-ம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகளை சில பள்ளி நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு தற்போது அனுப்பியுள்ளது.

6 வயது முடிவடைந்தால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: கல்வி அமைச்சகம் அதிரடி...!!

அதில், பிரீ கேஜி சேர்க்கைக்கு வரும் மாணவருக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதேபோல் எல்கேஜி எனில் நான்கு வயதும், யுகேஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தை பொறுத்தவரை 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக்கொள்கையின் படி 1 முதல் 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் மாணவர்கள் கல்வி பயில வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அங்கன்வாடி அல்லது கேஜி வகுப்புகளும், 12 ஆண்டுகள் வழக்கமான கல்வியும் பயில வேண்டும் என்று முக்கிய அம்சமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 1948-ம் ஆண்டு முதல்முறையாக கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2020ம் ஆண்டு வரை 8 முறை கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

2020ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், புதிய கல்விக்கொள்கைக்கான பரிந்துரைகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6 வயது பூர்த்தியானால் மட்டுமே முதலாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறைகள் பல பள்ளி நிர்வாகங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Centre on Wednesday directed all States and Union Territories to fix the minimum age for admission to Class I at six years. At present, for States like Karnataka and Goa it is 5 years and 10 months. However, the respective State governments have mandated six years to be the minimum age for admission to class I from the academic year 2025.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+