ஜம்மு-காஷ்மீருக்கு அடித்தது லக்...! 2 ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைகள் அமைகிறது..!!

Posted By:

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2 ஏஐஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படுவது ஏஐஐஎம்எஸ் எனப்படும் அகில இந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனைகள். இவற்றில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் பணிபுரிந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைகள் உள்ளன.

நாடெங்கும் இதுபோன்ற மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2 இடங்களில் ஏஐஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பாலி பகத் கூறியதாவது..

2 ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் இந்த ஒப்புதல் வந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலும், சாம்பா மாவட்டத்திலும் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். பிரதமரின் மறுசீரமைப்பு நிதியின் கீழிருந்து இந்தத் தொகை ஒதுக்கப்படும் என்றார் அவர்.

English summary
The Union government has granted approval to establish two All India Institutes of Medical Sciences (AIIMS) in Jammu and Kashmir state. According to IANS reports, Minister for Health and Medical Education Bali Bhagat said, "Approval to set up AIIMS was received by the state government last month. The location of the two AIIMS has already been made by the state government at Awantipora in south Kashmir's Pulwama district and Samba district in the Jammu region." A total amount of Rs 4,000 crore has been reserved for construction of AIIMS in Jammu and Kashmir under the Prime Minister's reconstruction package for the state, he added. Since both the projects are set up by the central government the budgetary details on the same to be suggested by the Union government, the minister added.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia