காஷ்மீர் மத்திய பல்கலை.யில் காத்திருக்கும் பேராசிரியர் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: காஷ்மீரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என மொத்தம் 12 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

காஷ்மீர் மத்திய பல்கலை.யில் காத்திருக்கும் பேராசிரியர் பணியிடங்கள்!!

சைக்காலஜி, சோஷியாலஜி, ஆங்கிலம், புவியியல், பொருளாதாரம், வரலாறு, பயோ சயின்ஸஸ், பிஸிக்கல் சயின்ஸஸ் உள்ளிட்ட துறைகளில் இந்தப் பணியிடங்கள் காத்திருக்கின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு 65 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் உள்ளிட்டோருக்கு ரூ.150 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். மற்ற பிரிவினருக்கு ரூ.300 வசூலிக்கப்படும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் அதை பிரிண்ட் எஅவுட் எடுத்து the Recruitment Section, Central University of Kashmir Nowgam Bye-pass, Near Puhroo Crossing, Srinagar - 190015 (J&K) என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 29 ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.cukashmir.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Central University of Kashmir invited applications for the posts of Professor, Associate Professor and Assistant Professor. The eligible candidates can apply to the post through the prescribed format latest by 29 February 2016.Age Limit 65 years Application Fee For SC/ST/Women/In-service Candidates of CUK- Rs. 150/- For all other candidates - Rs. 300/- Mode of Payment - Demand Draft in favour of Central University of Kashmir, payable at Srinagar (J&K).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia